
இந்தியரான, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான 'கிரீன் நோபல்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல கவிஞரும், முதுபெரும் இயக்குநருமான குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் டெல்லியில் வியாழக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், மத்திய தணிக்கைத் துறை(சிஏஜி) அமைப்புக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காசநோயை (டி.பி.) 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் கருவி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசியக் காசநோய் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் 2013 ஆண்டின் சம்பளம் வெறும் 1 டாலர் என்று தெரிகிறது.
அறிவியல் சார் கதையை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, நாசா-வின் 2014 ஆம் ஆண்டுக்கான அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் இலக்கிய பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.
மியாமி மாஸ்டர்ஸ் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் லீ நாவை வீழ்த்திய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை செரீனா வெல்வது இது 7-வது முறையாகும்.
இந்திய தொழிலக கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) புதிய தலை வராக அஜய் ஸ்ரீராம் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் டி.சி.எம்.ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள கடன் தொகை டிசம்பர் மாதம் 42,600 கோடி டாலராகும். இதில் அரசு பெற்றுள்ள கடன் தொகை மட்டும் 7,640 கோடியாகும் இது மொத்தக் கடன் தொகையில் 18 சதவீதமாகும். முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 8,170 கோடி டாலராக இருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்றொன்று நிஜாமாபாதிலும் அமைய உள்ளது.
நாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு பங்கு விற்பனையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.