Friday, June 8, 2018

BEST IAS IPS TNPSC BANK SI TNTET EXAM COACHING CENTRE IN COIMBATORE - SHANMUGAM IAS ACADEMY

Tuesday, June 5, 2018

BEST IAS IPS COACHING CENTER IN COIMBATORE - SHANMUGAM IAS ACADEMY

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சௌத் ஆப்பிரிக்கா(பிரிக்ஸ்) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், தூதுவர்கள், தலைவர்கள் பங்குகொண்ட மூன்று நாள் சர்வதேச வர்த்தக மாநாடு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் கடந்த மே 21ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் அப்துல் பாசித்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரிக்ஸ் நாடுகளின் அமைதிக்கான விருது மற்றும் பட்டயத்தை வழங்கிக் கவுரவித்தார். மேலும் இந்த விழாவில் இந்தியாவில் பிறந்த லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் லார்ட் தில்ஜித் சிங் ராணா MBE மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


அனைத்து மாநில ஆளுநர்களின் 49 வது மாநாடு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆறு அமர்வுகளாக நடைபெறும் இந்த அமர்வை இன்று காலை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.


கவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.

அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

   
 முதன் முதலாக தண்ணீருக்கான ஏடிஎம்கள் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இந்த வாட்டர் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களில் 300 மி.லி தண்ணீருக்கு 1 ரூபாய் எனவும், 500 மிலி்க்கு 3ரூபாய் எனவும், 1 லிட்டருக்கு 5 ரூபாய் எனவும், 1 லிட்டர் வாட்டர் பாட்டிலுடன் 8 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற 178 ஏடிஎம்கள் 100மும்பை ரயில் நிலையங்களிலும் புற நகர் ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐநா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக இந்தியாவில் இன்று 250க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன. இந்தாண்டு ஐநாவால் ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (05.06.2018): இன்று சுற்றுச்சூழல் தினம்

ஹவாயில் கிலாவேயா எரிமலை மீண்டும் வெடித்ததால் ஒரே நாளில் அடுத்தடுத்து 500 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலாவேயா எரிமலை கடந்த மே 3ஆம் தேதி வெடிக்கத் தொடங்கிய நிலையில் அந்நாட்டு அரசு அப்பகுதியில் இருந்து 2,000 பேரை வெளியேற்றியுள்ளது.

 
இணையதளத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டால் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஏடிஎம்களில் பணம் எடுப்பது, செக் புக் (காசோலைப் புத்தகம்) பெறுவது போன்ற சேவைகளுக்குக் கூடுதலான ஜிஎஸ்டி வசூலிக்கப்படாது என்றும், இலவச வங்கிச் சேவைகளுக்கு வரி விதிக்கப்படாது என்றும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

அசோசேம் கூட்டமைப்பும், என்.இ.சி. நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 2016ஆம் ஆண்டில் சர்வதேச மின்னணுக் கழிவுகளின் அளவு 44.7 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2021ஆம் ஆண்டுக்குள் 20 சதவிகித உயர்வுடன் 52.2 மில்லியன் டன்னாக அதிகரிக்கும். 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மொத்த மின்னணுக் கழிவுகளில் வெறும் 20 சதவிகிதக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 5) அறிவித்தார். உலகச் சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பால், எண்ணெய், மருத்துவம், தயிர் போன்றவை தவிர்த்து வேறு எதற்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.

Monday, June 4, 2018

BEST IAS IPS COACHING CENTER IN COIMBATORE - SHANMUGAM IAS ACADEMY

TOP AND BEST IAS ACADEMY IN COIMBATORE - SHANMUGAM IAS ACADEMY

Zebu Cattle

Zebu Cattle (also known as indicine cattle or humped cattle), is a species or subspecies of domestic cattle originating in Indian subcontinent. They are characterised by fatty hump on their shoulders, a large dewlap, and sometimes drooping ears. They are well adapted to withstanding high temperatures, and are farmed throughout tropical countries. They are used as dairy cattle, draught oxen and beef cattle.

Financial Action Task Force (FATF)

FATF is an inter-governmental body which monitors the progress of member countries in implementing necessary measures to check money laundering and terrorist financing.


White Tigers

In India, white tigers are predominantly found in Rewa, Madhya Pradesh. In 2016, world’s first White Tiger Safari was inaugurated at Mukundpur in Satna district of Madhya Pradesh.
The first white tiger in Madhya Pradesh’s was spotted in Vindhya region in 1915. However, the rare breed of the big cat spotted for the first time died in 1920. In 1951, a white tiger cub named Mohan was captured by Rewa Maharaja Martand Singh. Later the tiger cub became the progenitor of all known white tigers in the world after the Maharaja arranged for its breeding.
White tigers in India are nothing but a pigmentation variant of the Bengal tiger. They have been reported in the wild from time to time in the Indian states of Assam, West Bengal, Bihar. These tigers have white fur because of the lack of the pigment pheomelanin, which is found in Bengal tigers with orange colour fur.

Antibiotic resistance making gonorrhea difficult to treat

According to a new warning from the World Health Organization (WHO), antibiotic resistance is making gonorrhea difficult to treat. . Therefore, developing a vaccine is urgently needed to stop global spread of super-gonorrhoea.

About Gonorrhoea

Gonorrhoea disease (also called the clap) is caused by the bacterium Neisseria gonorrhoeae. It spreads by unprotected sex. Its symptoms include a thick green or yellow discharge from sexual organs, pain when urinating and bleeding between periods in case of in women. In many cases, no symptoms are seen at all. Untreated gonorrhoeae infection can lead to infertility in both genders, pelvic inflammatory disease in women and can be passed on to a child during pregnancy. According to WHO, about 78 million people pick up the sexually transmitted infection each year due to Gonorrhoea.

South  Asia  Wildlife  Enforcement  Network  (SAWEN)  is  an  intergovernmental  wildlife  law  enforcement  support  body  of  South  Asian  countries  namely  -  Afghanistan, Bangladesh, Bhutan, India,  Maldives, Nepal, Pakistan  and Sri  Lanka.

SAWEN was officially  launched  in  January, 2011 in  Paro Bhutan.

  It  promotes  regional  cooperation  to  combat  wildlife  crime  in  South  Asia.  It  focuses  on  policy harmonization;  institutional  capacity  strengthening  through  knowledge  and  intelligence  sharing;  and collaboration  with  regional  and  international  partners  to  enhance  wildlife  law  enforcement  in  the  member countries. SAWEN  operates its activities  from  the Secretariat  based  in  Kathmandu, Nepal. 

RPA 1950 vs RPA 1951

Representation  of  the  People  Act  of  1950  provides  for  the  qualifications  of  voters,  preparation  of electoral  rolls,  delimitation  of  constituencies,  allocation  of  seats  in  the  Parliament  and  state legislatures  and so  on.

 Representation  of  the  People  Act  of  1951  provides  for  the  actual  conduct  of  elections  and  deals  with administrative  machinery  for  conducting  elections,  the  poll,  election  offences,  election  disputes,  byelections,  registration of  political  parties  and  so on.

Tobin Tax:

A means  of  taxing  spot  currency  conversions  that  was  originally  suggested  by  American  economist  James Tobin  (1918-2002).  The  Tobin  tax  was  developed with the  intention  of  penalizing  short-term  currency speculation,  and  to  place  a  tax  on  all  spot  conversions  of  currency.  Rather  than a consumption  tax  paid by  consumers,  the  Tobin  tax  was  meant  to  apply  to  financial  sector  participants  as  a  means  of  controlling the stability  of  a given country's currency.

  A Pigovian  tax  is  a  tax  on  a  good  or  service  that  causes  a  harm  to  society  that  is  not  paid  by  the  users  of that  good or  service. It  is designed to  pay  for  the  negative externalities of  the good.

  A Sin tax is a  tax  levied  against  any  undesired  activity. This  includes taxes  on alcohol  and cigarettes.

  A ghetto  tax  is  a  term  used  to  describe  how  people  with  low  incomes  pay  higher  prices  for  goods  and services, particularly  those  living  in poverty-stricken areas.
அமெரிக்காவில் நடைபெறும் பேஸ்பால் விளையாட்டை இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா துவக்கி வைக்கிறார். அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுத் தொடர் தொடங்கவிருக்கிறது. இதன் முதல் போட்டியில் சீட்டில் மரினர்ஸ் மற்றும் தம்பா பே ராய்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை ஃபர்ட்ஸ்ட் பிட்ச் எனும் முறையில் பந்தை எறிந்து துவக்கி வைக்கிறார் ரோஹித் சர்மா. மேஜட் லீக் பேஸ்பாலின் துவக்க விழாவில் இதுபோல பிரபலங்கள் வந்து பந்தை எறிந்து துவக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை ரோஹித் சர்மா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கெளரவத்தைப் பெறும் முதலாவது இந்தியர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கூகுல் இந்தியா, நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை பீடா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேசனில் அருகில் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து எளிமையாகக் கண்டுபிடிப்பதுடன் அந்த ஏரியா வாசிகளிடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக அருகில் பூங்கா எங்கே உள்ளது எனத் தேடினால், அதன் முகவரி கிடைப்பதுடன் எந்த பூங்கா சிறப்பாக இருக்கும் அதன் நிறை குறைகள் என்ன போன்ற தகவல்களை அந்த ஏரியா வாசிகள் மூலமாக அறியலாம்.

ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள சுரேஷ் பிரபு தவ்லவ்ஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் ஆலைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அந்நிறுவனத்திடம் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் விமான உற்பத்தியில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் விமான உற்பத்தியில் ஈடுபட்டால் விமான உற்பத்தித் துறை விரிவடைவது மட்டுமின்றி இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

  
காவிாி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீா்வளத்துறை செயலாளா் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். விரைவில் நிரந்தரத் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களை வாங்குவோர் அதனை பதிவு செய்ய போக்குவரத்துத்துறைக்கு நேரில் சென்று தான் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில், புதுச்சேரியில், முதன் முறையாக போக்குவரத்துத்துறை சார்பில் வாகனங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில், நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி பெறச் செய்ய பல்கலைக்கழகம் உதவுகிறது.
அக்னி 5 ஏவுகணை இன்று ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.
   
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று (ஜூன் 4) விசாரணையைத் தொடங்கியது.
சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஆசிய டிவிஷன் 1’ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களம் இறங்க உள்ளது.
பெங்களுருவில் ஜுன் 16, 17ம் தேதிகளில் உலக தமிழ்ப் பண்பாட்டு மாநாடு நடைபெற உள்ளது.
பல்கலை மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர மற்றும் திறந்தவெளி பல்கலையில், தபால் வாயிலாக படித்தவர்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தகுதி பெற்றவர்கள் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
ஜுன் 15ம் தேதி உலக சுற்றுச்சுழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், கர்நாடகா மாநிலத்தில் கன்னட நடிகர் தர்ஷன் வனத்துறை தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் இணைந்து உத்தரகாண்டில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டது. இந்த கூட்டு இராணு பயிற்சி சூரிய கிரண் என்று அழைக்கப்படுகிறது.

    
அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி நடை பெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்தி நெம்மானி(14) முதல் பரிசு வென்றார். 11 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினரே தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிய வருகிறது.
சிங்கப்பூரில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனித கலாச்சார பேரவையின் சார்பில் நோம்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அரங்கத்திற்கு, காஷ்மீரில் இறந்த ஆஃசிபா பெயரையும், அந்த அரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஸ்னோலின் பெயரையும் சூட்டியுள்ளனர்.
அஜந்தா - எல்லோரா உள்ளிட்ட இந்தியாவின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பொதுத் துறை நிறுவனங்களுக்கான கூட்டங்கள், மாநாடு ஆகியவற்றை அப்பகுதிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அஜந்தா - எல்லோரா, புத்தகயா, ஹம்பி, கஜுராஹோ மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். அனைத்துத் துறைகளும் தங்களது துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை மேற்கூறிய இடங்களில் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்படுள்ளது’
   
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகளை(குமாரி பி.டி ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன்) நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக முன்னாள் நீதிபதி நசிருல் முல்க் பதவியேற்றுள்ளார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியில் கேப்டனாக ராணி ராம்பால் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஒடிஸா மாநிலத்தில் பணியாற்றி வரும் பத்திரிக்கையாளர்களுக்காக மருத்துவ காப்பீடு திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
டெல்லி மாநில அரசு, சாதி, பிறப்பு, இறப்பு, பென்சன் மற்றும் வருவாய், ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு மாற்றம் செய்தல், திருமண சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகிய 40 வகையான அரசு சேவைகள் மக்களின் வீடு தேடி வருவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
    
அரியானா மாநிலத்தில் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரவில், பிறந்த குழந்தையை முதல் 15 நாட்களுக்கு தாயால் மட்டும் பராமரிப்பது கடினம். எனவே அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மனோகர் லால் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவில் 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்ற டெல்லியை சேர்ந்த கல்பனா குமாரி தேசியளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற புதிய மொபைல் ஆப்ஸ் மூலம் பொதுமக்கள் காவல்துறையை விரைவில் தொடர்புகொண்டு அவசர கால உதவியைப் பெறலாம். இந்த ஆப் மூலம் எளிதாகவும் நேரடியாகவும் மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பேசலாம்.
சுவிசர்லாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி ஒன்று, உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய பல்வேறு உலக நாடுகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, மும்பை நகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 3,314.7 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தலைநகரான டெல்லி இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்தவர்கள் ஒரு ஆண்டிற்கு 2511.4 உழைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் உழைக்கும் மனிதர்கள் பட்டியலில், ஹனோய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளன.