Sunday, April 20, 2014

ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்கு 3 தேசிய விருது

தங்க மீன்கள்' திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

திரைப்படத் துறைக்கான 61-வது தேசிய விருதுகளை நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், மாநில மொழி பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக, ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திரைப்படத்தில் நடித்த சாதனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளது.
மேலும், தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற 'ஆனந்த யாழை' பாடலுக்காக, சிறந்த பாடலாசிரியருக்கான விருதை நா.முத்துக்குமார் பெறுகிறார்.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில், சிறந்த படமாக பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்' தேர்வு செய்யப்பட்டு, நர்கீஸ் தத் விருது வழங்கப்படுகிறது.
தமிழின் 'வல்லினம்' படத்துக்கு சிறந்த எடிட்டிங் பிரிவில் சாபு ஜோசப்-புக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
சினிமா அல்லாத பிரிவில், தமிழில் வெளியான 'தர்மம்' என்ற குறும்படம் சிறப்பு விருதை வென்றுள்ளது. இதை இயக்கியவர் மடோன் எம்.அஸ்வின். ஒரு குழந்தையின் பார்வையில் நடுத்தர வர்க்க வாழ்க்கையைப் பதிவு செய்த குறும்படம் இது.
பல்வேறு பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் இம்முறை தேசிய விருதுகளை வென்றிருப்பது பெங்காலி மற்றும் மராத்தி மொழி படங்களே என்பது கவனிக்கத்தக்கது.
விருதுகளின் பட்டியல் வருமாறு:
* சிறந்த திரைப்படம்: ஷிப் ஆஃப் தீசிஸ்  (ஆங்கிலம் - இந்தி)
* சிறந்த புதுமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: ஃபாண்ட்ரி  (மராத்தி)
* சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - பாக் மில்கா பாக்
* தேசிய ஒறுமைப்பாட்டிற்கான நர்கிஸ் தத் விருது - தலைமுறைகள்
* சமூகப் பிரச்சினைகளைக் காட்டிய சிறந்த படம்: தூஹியா தர்மா கோச்சா  (மராத்தி)
* சிறந்த சுற்றுச்சூழல் திரைப்படம் : பெரறியாதவர்  (மலையாளம்)
* சிறந்த குழந்தைகள் படம் - காபல்  (இந்தி)
* சிறந்த இயக்குநர் - ஹன்ஷல் மேத்தா (படம்: ஷாஹித்) (இந்தி)
* சிறந்த நடிகர் - ராஜ்குமார் (ஷாஹித் - இந்தி) மற்றும் சூரஜ் வெஞ்சராமூடு (பேரறியாதவர் - மலையாளம்)
* சிறந்த நடிகை - கீதாஞ்சலி தாபா (படம்: லயர்ஸ் டைஸ் - இந்தி)
* சிறந்த உறுதுணை நடிகர்: செளரப் சுக்லா (ஜாலி எல்.எல்.பி - இந்தி)
* சிறந்த உறுதுணை நடிகை: அமிருதா சுபாஷ் (அஸ்து - மராத்தி) மற்றும் ஆயிடா எல்-காஷெஃப் (ஷிப் ஆஃப் தீசஸ்- ஆங்கிலம், இந்தி)
* சிறந்த குழந்தை நட்சத்திரம்: சோம்நாத் அவ்காடே (ஃபாண்ட்ரி - மராத்தி) மற்றும் சாதனா (தங்கமீன்கள் - தமிழ்)
* சிறந்த பின்னணி பாடகர்: ரூபன்கர் (படம் - ஜாதிஸ்வர் - பெங்காலி)
* சிறந்த பின்னணி பாடகி: பெலா ஷிண்டே (படம்: துஹ்யா தர்மா கோச்சா - மராத்தி)சிறந்த ஒளிப்பதிவு - ராஜீவ் ரவி ( இந்தி)
* சிறந்த திரைக்கதை (அசல்) - ஷேசாத்திரி (டிசம்பர் 1 - கன்னடம்)
* சிறந்த திரைக்கதை (தழுவல்) - பஞ்சாக்‌ஷரி (பராக்ருதி - கன்னடம்)
* சிறந்த திரைக்கதை (வசனம்) - சுமித்ரா பாவே (அஸ்து - மராத்தி)
* சிறந்த ஆடியோகிரபி : நிகர் ரஞ்சன் சமல் (மெட்ராஸ் கபே - இந்தி)
* சிறந்த ஆடியோகிரபி  - பிஸ்வாதீப் சட்டர்ஜி (மெட்ராஸ் கபே - இந்தி)
* சிறந்த ஆடியோகிரபி  - யுவராஜ் - ஸ்வப்னம் (மலையாளம்)
* சிறந்த எடிட்டிங் - சாபு ஜோசப் (வல்லினம்)
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - ஆஷிம் அலுவாலியா, தப்ஷீர் ஸுத்சி, பரிசித் பரால்கர் (மிஸ் லவ்லி - இந்தி)
* சிறந்த ஆடை வடிவமைப்பு - சபர்னி தாஸ் (ஜாதிஷ்வர்  - பெங்காலி)
* சிறந்த ஒப்பனை கலைஞர் - விக்ரம் கெய்க்வாட் (ஜாதீஷ்வர் - பெங்காலி)
* சிறந்த இசை (பாடல்கள்) - கபிர் சுமன் (ஜாதீஷ்வர் - பெங்காலி)
* சிறந்த இசை (பின்னணி இசை) - சாந்தனு மோஹித்ரா (நா பங்காரு தாலி - தெலுங்கு)
* சிறந்த பாடலாசியர்: நா.முத்துகுமார் (ஆனந்த யாழை - தங்கமீன்கள்)
* சிறப்பு நடுவர் விருது: எல்லோ (மராத்தி) மற்றும் மிஸ் லவ்லி (இந்தி)
* சிறந்த கிராபிக்ஸ்: இன்டர்மெஸ்ஸோ ஸ்டூடியோ, ஏலியன் சென்ஸ் ஃபிலிம் லிட் (ஜல் - இந்தி)
* சிறந்த நடனம்: கணேஷ் ஆச்சார்யா (பாக் மில்கா பாக் - இந்தி)
* சிறந்த அசாமி மொழி படம்: அஜேயோ  
* சிறந்த வங்கமொழி திரைப்படம் - பாகிதா பியாக்திகடோ  
* சிறந்த இந்தி திரைப்படம்: ஜாலி எல்.எல்.பி
* சிறந்த கன்னடத் திரைப்படம்: டிசம்பர் 1
* சிறந்த கொங்கானி திரைப்படம்: பாகா பீச்
* சிறந்த மலையாள திரைப்படம்: நார்த் 24 காதம்
* சிறந்த மராத்தி திரைப்படம் - அஞ்சா திவாஜ் மாஜ்ஹா  
* சிறந்த தமிழ் திரைப்படம் - தங்க மீன்கள்
* சிறந்த தெலுங்கு திரைப்படம் - நா பங்காரு தாலி  
* சிறந்த ஆங்கில திரைப்படம் - தி காஃபின் மேக்கர்