Saturday, April 19, 2014

ஹிந்தி கவிஞர் குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது

பிரபல கவிஞரும், முதுபெரும் இயக்குநருமான குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவமாக தாதா சாஹேப் பால்கே கருதப்படு கிறது.
79 வயதாகும் குல்சார் ஹிந்தி, உருது மொழிகளில் மட்டுமல் லாது பஞ்சாபி மொழியிலும் புகழ்பெற்ற கவிதைகளையும், திரைப்பட பாடல்களையும் எழுதி யுள்ளார். கவிஞர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பாடலா சிரியர் என கலைத்துறையில் பல்வேறு தளங்களின் சிறப் பான பங்களிப்பை குல்சார் அளித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடலும் குல்சாரின் படைப்புதான்.
மேரே அபுனே, கோஷிஸ், குஷ்பூ, அங்கோர், லிபாஸ், மாச்சிஸ் உள்ளிட்ட நினைவில் இருந்து நீங்காத திரைப்படங்கள் குல்சாரின் இயக்கத்தில் வெளி வந்தவை.
சம்பூரண் சிங் கால்ரா என்ற இயற்பெயருடைய குல்சார், 1934-ல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். தேசப் பிரிவினையின்போது அவரது குடும்பம் அமிருதசரஸுக்கு வந்தது. இளம் வயதிலேயே மும்பை வந்துவிட்ட குல்சார், வாகனங்களை பழுதுபார்க்கும் பணியில் சேர்ந்தார். ஓய்வு நேரங்களை கவிதை எழுதத் தொடங்கிய அவரை கலைத் துறை முழுமையாக ஈர்த்துக் கொண்டது. திரைத் துறையில் மட்டுமல்லாது பிற்காலத்தில் சின்னத் திரையிலும் குல்சார் தனது முத்திரையைப் பதித்தார். அவரது தொலைக்காட்சி தொடர் களும், அதற்காக எழுதிய பாடல்களும் மிகவும் பிரபலம்.
2002-ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. 2004-ல் பத்ம பூஷண் விருது பெற்றார். ஏராளமான தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.