Saturday, April 19, 2014

புதிய கடற்படை தலைமை தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் பொறுப்பேற்பு

Photo: புதிய கடற்படை தலைமை தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் பொறுப்பேற்பு

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் டெல்லியில் வியாழக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.

கடற்படையில் அண்மைக் காலங்களில் அடுத்தடுத்து 14 விபத்துகள் நேரிட்டன. இதைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி 2 மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தற்காலிக தளபதியாக ராபின் கே. தோவன் பொறுப்பேற்றார். நேற்று அவர் நாட்டின் 22-வது கடற்படைத் தளபதியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

ராபின். கே. தோவன் மே 31-ல் ஓய்வு பெறுவதாக இருந்தது. தற்போது அவர் தளபதியாக பொறுப்பேற்றி ருப்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். அதன்படி 2016 மே மாதம் வரை அவர் கடற்படை தளபதியாக செயல்படுவார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற ஆர்.கே.தோவன், ஐ.என்.எஸ்.குக்ரி, ஐ.என்.எஸ். ரஞ்சித், ஐ.என்.எஸ். டெல்லி உள்ளிட்ட பல்வேறு போர்க்கப்பல்களில் பணியாற்றியுள்ளார். கடற்படையில் பல்வேறு முக்கிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் டெல்லியில் வியாழக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.

கடற்படையில் அண்மைக் காலங்களில் அடுத்தடுத்து 14 விபத்துகள் நேரிட்டன. இதைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி 2 மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்காலிக தளபதியாக ராபின் கே. தோவன் பொறுப்பேற்றார். நேற்று அவர் நாட்டின் 22-வது கடற்படைத் தளபதியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
ராபின். கே. தோவன் மே 31-ல் ஓய்வு பெறுவதாக இருந்தது. தற்போது அவர் தளபதியாக பொறுப்பேற்றி ருப்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். அதன்படி 2016 மே மாதம் வரை அவர் கடற்படை தளபதியாக செயல்படுவார்.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற ஆர்.கே.தோவன், ஐ.என்.எஸ்.குக்ரி, ஐ.என்.எஸ். ரஞ்சித், ஐ.என்.எஸ். டெல்லி உள்ளிட்ட பல்வேறு போர்க்கப்பல்களில் பணியாற்றியுள்ளார். கடற்படையில் பல்வேறு முக்கிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.