Tuesday, April 1, 2014

குழந்தைகள் செல்போனில் பேச தடை

குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதம் முதல், பள்ளியில் பயிலும் சுமார் 13,000 மாணவர்கள், இரவு 9 மணிக்கு மேல் தங்களது செல்போன்களை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது என்றாலும், குழந்தைகளின் செல்போன் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை தங்களுக்கு உதவியாக இருக்கும் என பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.