Monday, June 4, 2018

சுவிசர்லாந்து நாட்டைச் சேர்ந்த வங்கி ஒன்று, உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் யார் என்பதைக் கண்டறிய பல்வேறு உலக நாடுகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, மும்பை நகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 3,314.7 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தலைநகரான டெல்லி இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. டெல்லியை சேர்ந்தவர்கள் ஒரு ஆண்டிற்கு 2511.4 உழைப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் உழைக்கும் மனிதர்கள் பட்டியலில், ஹனோய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளன.