Tuesday, June 5, 2018

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, சௌத் ஆப்பிரிக்கா(பிரிக்ஸ்) ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், தூதுவர்கள், தலைவர்கள் பங்குகொண்ட மூன்று நாள் சர்வதேச வர்த்தக மாநாடு டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் கடந்த மே 21ஆம் தேதி முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும் அப்துல் பாசித்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிரிக்ஸ் நாடுகளின் அமைதிக்கான விருது மற்றும் பட்டயத்தை வழங்கிக் கவுரவித்தார். மேலும் இந்த விழாவில் இந்தியாவில் பிறந்த லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் லார்ட் தில்ஜித் சிங் ராணா MBE மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


அனைத்து மாநில ஆளுநர்களின் 49 வது மாநாடு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆறு அமர்வுகளாக நடைபெறும் இந்த அமர்வை இன்று காலை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.


கவுதமாலா நாட்டில் தலைநகா் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பியூகோ எரிமலை திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து பல கி.மீ. தொலைவிற்கு 700 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு (லாவா) வெளியேறி வருகிறது.

அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.