Saturday, May 12, 2018

செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால் இதன் வேகம் போதவில்லை என்பதால் தற்போது இன்சைட் ரோபோட் அனுப்பப்பட்டு உள்ளது. இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.