Tuesday, May 8, 2018

ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் விளாடிமிர் புதின். ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன்படி கடந்த மார்ச் 18 ஆம் தேதி அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. 109 நாடுகளைச் சேர்ந்த 1,500 பார்வையாளர்கள் வாக்குப்பதிவைக் கண்காணித்தனர். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில், 76.6 சதவிகித வாக்குகளை புதின் பெற்றுள்ளதாக அந்நாட்டு மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு புதின் 63.6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தற்போது அதைவிட அதிக வாக்குகளைப் பெற்றார்.