Monday, May 14, 2018

லதா மங்கேஷ்கர் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளுள் ஒருவராவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், அவரது கலை பணிகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்ம பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார்.