Saturday, May 12, 2018

அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று தனியார் நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது. ஜெஃப் பிஸோஸ் என்ற அமெரிக்கருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும் இது. பொதுவாக பூமியை விட்டு வெளியே செல்லும் ராக்கெட்டுகள் திரும்பி வராது. அப்படி வந்தால், பூமியின் வளிமண்டலம் காரணமாக அது தீப்பிடித்து சாம்பலாகும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தீயில் சாம்பலாகாமல் மீண்டும் பூமிக்கு திரும்ப வரும் ராக்கெட்டுகளை வடிவமைத்தது. தற்போது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் இப்படி வடிவமைத்துள்ளது. அவர்கள் அனுப்பிய நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட்டும் திரும்பி வந்துள்ளது.