Monday, June 4, 2018

அமெரிக்காவில் நடைபெறும் பேஸ்பால் விளையாட்டை இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா துவக்கி வைக்கிறார். அமெரிக்காவில் மேஜர் லீக் பேஸ்பால் விளையாட்டுத் தொடர் தொடங்கவிருக்கிறது. இதன் முதல் போட்டியில் சீட்டில் மரினர்ஸ் மற்றும் தம்பா பே ராய்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டியை ஃபர்ட்ஸ்ட் பிட்ச் எனும் முறையில் பந்தை எறிந்து துவக்கி வைக்கிறார் ரோஹித் சர்மா. மேஜட் லீக் பேஸ்பாலின் துவக்க விழாவில் இதுபோல பிரபலங்கள் வந்து பந்தை எறிந்து துவக்கி வைப்பது வழக்கம். அந்த வகையில் இம்முறை ரோஹித் சர்மா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். இந்தக் கெளரவத்தைப் பெறும் முதலாவது இந்தியர் எனும் பெருமையையும் ரோஹித் சர்மா பெறுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கூகுல் இந்தியா, நெய்பர்ஹூட் எனும் புது அப்ளிகேசனை பீடா வெர்சனில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேசனில் அருகில் செல்ல வேண்டிய இடங்கள் குறித்து எளிமையாகக் கண்டுபிடிப்பதுடன் அந்த ஏரியா வாசிகளிடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக அருகில் பூங்கா எங்கே உள்ளது எனத் தேடினால், அதன் முகவரி கிடைப்பதுடன் எந்த பூங்கா சிறப்பாக இருக்கும் அதன் நிறை குறைகள் என்ன போன்ற தகவல்களை அந்த ஏரியா வாசிகள் மூலமாக அறியலாம்.

ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள சுரேஷ் பிரபு தவ்லவ்ஸில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் ஆலைக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அந்நிறுவனத்திடம் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் விமான உற்பத்தியில் ஏர்பஸ் நிறுவனம் ஈடுபட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் விமான உற்பத்தியில் ஈடுபட்டால் விமான உற்பத்தித் துறை விரிவடைவது மட்டுமின்றி இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.