Wednesday, March 26, 2014

இறையடியானுக்கு சாகித்ய அகாடமி விருது: 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்காக தேர்வு

கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ் வரி' நாவலை தமிழில் சிறப்பாக‌ மொழிபெயர்ப்பு செய்ததற்காக எழுத்தாளர் இறைடியானுக்கு, 2013-ம் ஆண்டின் சிறந்த மொழிப் பெயர்ப்பாளருக்கான‌ ‘சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கான பரிசளிப்பு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

2012-ல் கன்னடத்தில் வெளியான ‘அவதேஸ்வரி' நாவல், 'பண்டைய காலத்தில் வடகர்நாடகாவில் உறவுகள் முறிய கூடாது என் பதற்காக அண்ணனுக்கும் தங்கைக்கும் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நடை முறையில் இருந்தது. இது குறித்து ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கிடைத்த‌ தடயங்களை வைத்து எழுத்தாளர் ‘ச‌ங்கர மொகாஷி புனேகர்' என்ப வரால் கன்னடத்தில் நாவல் எழுதப்பட்டது. வாசகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந் நாவலுக்கு 2012-ம் ஆண்டிற்கான‌ சிறந்த கன்னட நாவலாக 'சாகித்ய அகாடமி'விருது வழங்கப்பட்டது.
கன்னடத்தில் கவனத்தை ஈர்த்த ‘அவதேஸ்வரி' நாவலை, எழுத்தாளர் இறையடியான்(73) தமிழில் மொழிபெயர்த்தார்.தமிழில் வெளியான ‘அவதேஸ் வரி', தீவிர‌ இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக‌ பேசப்பட்டது.
இந்நிலையில் 2013-ஆம் ஆண்டில் வெளிவந்த‌ சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளை சமீபத்தில் அறி வித்தது. ‘அவதேஸ்வரி' நாவலை சிறப்பாக‌ தமிழில் மொழிப்பெயர்த்த எழுத்தாளர் இறையடியானுக்கு, ‘2013-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருப் பதாக அறிவிக்கப்பட்டது.ஆகஸ்ட் மாதம் டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அவருக்கு பரிசு கேடயமும், பரிசு தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.