Thursday, February 27, 2014

வியட்நாம் - அமெரிக்கா அணு ஒப்பந்தம்: அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல்

அமெரிக்கா – வியட்நாம் இடையிலான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார்.
இதன் மூலம் வியட்நாமுக்கு அணுசக்தி தொழில்நுட்ப சாதனங் களை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய முடியும்.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மற்றும் எரிசக்தி துறைக்கு ஒபாமா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அமைதிப் பயன்பாட்டு அணு சக்தி திட்டங்களில் வியட்நாமுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்கான உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கிறேன். இந்த உடன்பாட்டால் அந்நாட்டுடன் வர்த்தக உறவு மேம்படுவதுடன், பொது அமைதி மற்றும் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என நம்புகிறேன்” என்று குறிப் பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் கையெழுத் திட்டதை தொடர்ந்து, இந்த உடன்பாட்டை ஆராய அமெரிக்க நாடாளுமன்றம் 90 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த உடன்பாடு நடைமுறைக்கு வரும்.
“யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம். தங்கள் அணுசக்தி திட்டங்களுக்கு தேவை யானவற்றை சர்வதேச சந்தையில் பெற்றுக்கொள்வோம்” என வியட்நாம் உறுதி அளித்துள்ளது.
வியட்நாம் சிவில் அணுசக்தி திட்டம் மூலம் அந்நாட்டுடனான வர்த்தகம் 2030-ல் 5,000 கோடி அமெரிக்க டாலராக உயரும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.