இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பச்சை பதிவெண் பலகைகள் வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்படி, தனியார் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவெண்கள் வெள்ளை நிறத்திலும், டாக்ஸிகளுக்கு பதிவெண்கள் மஞ்சள் நிறத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இயக்க அனுமதி வழங்கவும், குறிப்பிட்ட விழுக்காட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க டாக்ஸி நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.