சிஎம்எஸ் இந்தியா அமைப்பினர் வெளியிட்ட ஊழல் ஆய்வு - 2018 அறிக்கையில் இந்திய அளவில் ஊழலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெலங்கானா ஊழலில் இரண்டாம் இடத்தையும், ஆந்திரா நான்காம் இடத்தையும் பிடித்து தென்னிந்தியாவுக்குப் ‘பெருமை’ சேர்த்திருக்கின்றன. சிஎம்எஸ் அமைப்பின் அலோக் ஸ்ரீவத்சவா இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் பல்வேறுகட்ட ஆய்வுகள் மூலமாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதாரம், மக்கள் நிலை உள்ளிட்ட பல்வேறு துணைக் காரணிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் தமிழ்நாடு ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிக மிக பலவீனமாக இருக்கிறது தமிழ்நாடு” என்று குறிப்பிடுகிறார். |