காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் நேற்று (மே 11) அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், ”பெண்கள் அல்லது பெண் குடும்பத்தினர் பெயரில் சொத்து வாங்குபவர்களுக்கு முத்திரைக் கட்டணத்திலிருந்து முற்றிலுமாக விலக்கு அளித்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புறநகரில் ஆண்கள், ஆண் குடும்பத்தினர் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு 5 சதவிகிதமும், கிராமப் பகுதிகளில் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு 3 சதவிகித முத்திரைக் கட்டணம் செலுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது பெண்கள் சொத்து வாங்குவதை ஊக்குவிக்க உதவும்” என்றார்.