தங்க மீன்கள்' திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், மத்திய தணிக்கைத் துறை(சிஏஜி) அமைப்புக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அறிவியல் சார் கதையை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, நாசா-வின் 2014 ஆம் ஆண்டுக்கான அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் இலக்கிய பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.
குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மியாமி மாஸ்டர்ஸ் மகளிர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சீனாவின் லீ நாவை வீழ்த்திய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி மாஸ்டர்ஸ் பட்டத்தை செரீனா வெல்வது இது 7-வது முறையாகும்.
இந்திய தொழிலக கூட்டமைப் பின் (சி.ஐ.ஐ.) புதிய தலை வராக அஜய் ஸ்ரீராம் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர் டி.சி.எம்.ஸ்ரீராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். 2014-15-ம் ஆண்டுக்கான தலைவராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள கடன் தொகை டிசம்பர் மாதம் 42,600 கோடி டாலராகும். இதில் அரசு பெற்றுள்ள கடன் தொகை மட்டும் 7,640 கோடியாகும் இது மொத்தக் கடன் தொகையில் 18 சதவீதமாகும். முந்தைய ஆண்டு டிசம்பரில் இது 8,170 கோடி டாலராக இருந்தது என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.
ஆந்திர மாநிலத்தில் 2 பிரம்மாண்டமான உணவு பதப்படுத்தல் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு கோதாவரி பகுதியிலும் மற்றொன்று நிஜாமாபாதிலும் அமைய உள்ளது.
பிலிப்பின்ஸில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் போராளிகள் குழுவுக்கும் அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதன் மூலம் 40 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மூத்த வாக்காளர் என்று தேர்தல் ஆணையத்தால் கவுரவப்படுத்தப்பட்டுள்ள ஷியாம் சரண் நேகி (97), தோன்றும் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு பங்கு விற்பனையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரியை நியமிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு பங்கு விற்பனையைக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பங்குகளை விற்பனை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் உள்ளிட்ட பிற அரசு நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகளை புதிதாக நியமிக்கப்பட உள்ள ஓய்வு பெற்ற அதிகாரி கண்காணிப்பார்.
டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவில், 2014- ஆம் ஆண்டுக்கான 'வாழ்க்கைக்காக தண்ணீர் விருது' (Water for Life award) இந்தியா மற்றும சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.