முதன் முதலாக தண்ணீருக்கான ஏடிஎம்கள் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் இந்த வாட்டர் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்களில் 300 மி.லி தண்ணீருக்கு 1 ரூபாய் எனவும், 500 மிலி்க்கு 3ரூபாய் எனவும், 1 லிட்டருக்கு 5 ரூபாய் எனவும், 1 லிட்டர் வாட்டர் பாட்டிலுடன் 8 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற 178 ஏடிஎம்கள் 100மும்பை ரயில் நிலையங்களிலும் புற நகர் ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐநா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக இந்தியாவில் இன்று 250க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன. இந்தாண்டு ஐநாவால் ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (05.06.2018): இன்று சுற்றுச்சூழல் தினம்
ஹவாயில் கிலாவேயா எரிமலை மீண்டும் வெடித்ததால் ஒரே நாளில் அடுத்தடுத்து 500 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிலாவேயா எரிமலை கடந்த மே 3ஆம் தேதி வெடிக்கத் தொடங்கிய நிலையில் அந்நாட்டு அரசு அப்பகுதியில் இருந்து 2,000 பேரை வெளியேற்றியுள்ளது.