அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி நடை பெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கார்த்தி நெம்மானி(14) முதல் பரிசு வென்றார். 11 ஆண்டுகளாக நடைபெறும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளியினரே தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிய வருகிறது.
சிங்கப்பூரில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய நேரடி விமான சேவையை வரும் அக்டோபர் முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனித கலாச்சார பேரவையின் சார்பில் நோம்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அரங்கத்திற்கு, காஷ்மீரில் இறந்த ஆஃசிபா பெயரையும், அந்த அரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த ஸ்னோலின் பெயரையும் சூட்டியுள்ளனர்.
அஜந்தா - எல்லோரா உள்ளிட்ட இந்தியாவின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்தும் நோக்கில் பொதுத் துறை நிறுவனங்களுக்கான கூட்டங்கள், மாநாடு ஆகியவற்றை அப்பகுதிகளில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அஜந்தா - எல்லோரா, புத்தகயா, ஹம்பி, கஜுராஹோ மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்களில் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். அனைத்துத் துறைகளும் தங்களது துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை மேற்கூறிய இடங்களில் கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்படுள்ளது’