காவிாி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீா்வளத்துறை செயலாளா் யு.பி.சிங் நியமிக்கப்பட்டுள்ளாா். விரைவில் நிரந்தரத் தலைவா் நியமிக்கப்படுவாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களை வாங்குவோர் அதனை பதிவு செய்ய போக்குவரத்துத்துறைக்கு நேரில் சென்று தான் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில், புதுச்சேரியில், முதன் முறையாக போக்குவரத்துத்துறை சார்பில் வாகனங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பாலில், நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட துறைகளை வளர்ச்சி பெறச் செய்ய பல்கலைக்கழகம் உதவுகிறது.
அக்னி 5 ஏவுகணை இன்று ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டது. சராசரியாக 5,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8.000 முதல் 10,000 கிலோ மீட்டர் வரை சென்று துல்லியமாகத் தாக்கக்கூடிய வகையில் அக்னி 6 ஏவுகணையை தயாரிக்கும் பணியில் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டுள்ளது.