உலகளவில் கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐநா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவம் மற்றும் அறிவியல் பயன்பாட்டுக்காகச் சட்டரீதியாக உலகத்தின் சில பகுதிகளில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. ஐநாவின் சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, 2016ஆம் ஆண்டில் 95 டன் அளவிலான கஞ்சாவை இங்கிலாந்து உற்பத்தி செய்துள்ளது. இது 2015ஆம் ஆண்டின் உற்பத்தியை விட இரு மடங்கு அதிகமாகும். மேலும், இது உலகின் மொத்த கஞ்சா உற்பத்தியில் 44.9 விழுக்காடு ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் 80.7 டன் கஞ்சா உற்பத்தியுடன் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது.