வழக்குலம் அன்னாசிப் பழங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சிக்கு அருகிலுள்ள சிறிய நகரம் வழக்குலம். இந்த நகரம் அன்னாசிப் பழ உற்பத்திக்குப் புகழ்பெற்றது. அன்னாசி நகரம் என்றே இந்நகரம் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அன்னாசிப் பழ உற்பத்தி மையமாகவும் வழக்குலம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 80 விழுக்காடு அன்னாசிப் பழங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அன்னாசிப் பழ உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.