அமெரிக்காவின் வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒவ்வோர் ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 75 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீன அதிபர் க்ஷி ஜின்பிங் முதலிடத்திலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டாம் இடத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு 32ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் 4ஜி சேவையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதாகவும், குறுகிய காலத்தில் 16 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.