புனிதமான கங்கை நதி அதிக மாசடைந்து வருவதால் அதைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் 2014ஆம் ஆண்டின் ஜூன் மாதம் மத்திய மோடி அரசால் ரூ.20,000 கோடி பட்ஜெட் இலக்குடன் ‘கங்கை தூய்மைத் திட்டம்’ (நமாமி கங்கே) செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின்கீழ் குறிப்பிடும்படியாக எதுவும் நடக்கவில்லை என்றும், கங்கை நதி தூய்மைப்படுத்தப்படவேயில்லை என்றும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. இதை மறுக்கும் மத்திய அரசு, 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் கங்கை நதியின் 70 முதல் 80 சதவிகிதம் அளவு தூய்மைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.