6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை தற்போது இந்தியாவில் 38.4 விழுக்காடாக உள்ளது. இதை 2022ஆம் ஆண்டுக்குள் 25 விழுக்காடாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், உலக வங்கியும் மே 7ஆம் தேதி கையெழுத்திட்டன’