பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் ஜூன் 1ஆம் தேதி கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை திறக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணி முடிவடைந்த பிறகும், சாலை பயன்பாட்டுக்கு வரவில்லை.
135 கி.மீ நீளமுள்ள எக்ஸ்பிரஸ் சாலையானது காசியாபாத், பரிதாபாத், கவுதம் புத்தா நகர் (கிரேட்டர் நொய்டா) மற்றும் பல்வால் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால், டெல்லி நகருக்குள் பயணம் செய்யும் சுமார் 2 லட்சம் வாகனங்கள் நகருக்குள் வர வேண்டிய தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசலும் இருக்காது.