Saturday, May 26, 2018
Tuesday, May 22, 2018
BEST IAS ACADEMY IN COIMBATORE - SHANMUGAM IAS ACADEMY
BEST IAS ACADEMY IN COIMBATORE - SHANMUGAM IAS ACADEMY
Monday, May 21, 2018
UPSC Recruitment Alert! Major move by the government, wants to make this new change
🔰UPSC
Recruitment: According to a major development, the central government
is in works to make amendments in the allocation of services to the
candidates who have successfully completed the civil services
examination.
🔰UPSC
Recruitment: According to a major development, the central government
is in works to make amendments in the allocation of services to the
candidates who have successfully completed
the civil services examination. According to an official communique,
the Prime Minister’s Office has checked with the departments which are
concerned to examine if the services can be allocated after the
completion of foundation course.
🔰As
of now, the UPSC conducts the civil services examination in three
stages: these are preliminary, mains and interview. It is only after a
candidate who clears all the three stages, then only he/she is selected
for various central services. Thereafter, the service allocation to the
selected candidates selected is done keeping in mind the results of the
civil services examination. The allocation of services is made before
the foundation course starts. It should be noted that the duration of
the foundation course for the selected officers for all the services for
three months.
🔰As
per the communication sent by the Personnel Ministry to different
cadre-controlling authorities, the PMO has expressed to look in the
matter if service allocation/cadre allocation to probation officers can
be made after the foundation course is over.
🔰All
the departments who are concerned with the procedure have been asked to
examine if the step can take place. The suggestion has been made in
order to give weightage of performance in the foundation course as well.
The communique said that this move will help in making the service
allocation to all India services officers on a combined score obtained
in foundation course as well as in the civil services examination.
🔰According
to Personnel Ministry official, “The departments (Indian Administrative
Service (IAS), Indian Police Service (IPS) and Indian Forest Service
(IFoS)) have been asked to give their feedback on the proposal to
allocate other central services like the Indian Revenue Service (IRS)
and Indian Telecommunications Service (ITS) among others.”






நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சி அடிப்படையிலான தர நிர்ணயத் திட்டத்தை அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் 2018-19 நிதியாண்டில் அமல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தார். இதன்படி, வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய இந்தியாவின் 101 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படும். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், வேளாண்மை, நீர்வளம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு ஆகிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களின் தரவுகள் அரசு சார்பாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். மேலும், 101 மாவட்டங்களும் அவற்றின் மேம்பாட்டுப் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படும். கேரளா மற்றும் மேற்கு வங்கம் தவிர்த்து அனைத்து இந்திய மாநிலங்களும் இத்திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன. இம்மாநிலங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் இணைந்துவிடும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மாவட்டங்களுக்கான தரவரிசையில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விசாகப்பட்டினம் 48.13 சதவிகிதப் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மீவட் மாவட்டம் 26.02 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் இருக்கின்றன. ராஜ்நந்த்கான், ஆஸ்மனாபாத், கடப்பா, ராமநாதபுரம், உத்தம்சிங் நகர், மகாசமந்த், கம்மம் உள்ளிட்ட மாவட்டங்களும் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
Sunday, May 20, 2018
கடந்த ஆண்டு ஏற்பட்ட புயலில் கரீபிய கிரிக்கெட் மைதானங்கள் சேதமடைந்தன. இதைச் சீரமைக்க நிதி திரட்டும் பொருட்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் வேர்ல்டு லெவன் அணிகள் மோதும் ‘ஹரிக்கேன் ரிலீஃப் டிவென்டி 20 சேலஞ்ச்’ போட்டி இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் மே 31ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான வேர்ல்டு லெவன் அணியில் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சந்தீப் லாமிச்சானே இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
ஒரு சமூகத்தின் மரபுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துகளாகக் கருதப்படும் இந்த அருங்காட்சியகங்கள் தொல்லியல், இயற்கை வரலாறு, கடல்சார், கலை, வரலாறு, போர் எனப் பல வகைப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதியை உலக அருங்காட்சியக தினமாக சர்வதேச அருங்காட்சிய கவுன்சில் அறிவித்தது. 1977ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மே 18ஆம் தேதியும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை சார்பாக ஆர்பிஎஃப் கவாத் மைதானத்தில் மே 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் ரயில்பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் உலகின் புகழ்பெற்ற ரயில் பெட்டி மற்றும் சாதனத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருட்களையும், தொழில்நுட்பத்தையும் வைத்துள்ளன. 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்று, இக்கண்காட்சியில் புதுமைப் படைப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் உற்பத்திப் பொருட்களை ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே முதன் முறையாக நடைபெறும் ரயில்பெட்டி கண்காட்சியை நேற்று (மே 17) ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.
BEST AND TOP TET EXAM COACHING CENTRE IN COIMBATORE. NEW BATCH STARTS ON SOON.
BEST AND TOP TET EXAM COACHING CENTRE IN COIMBATORE. NEW BATCH STARTS ON SOON.
எபோலோ வைரஸ் நோய் மீண்டும் காங்கோவில் வேகமாகப் பரவிவருவதையடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. காங்கோவின் வட மேற்கு நகரான பண்டகாவிலிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் எபோலோ வைரஸ் நோய் இருப்பதை இந்த மாதத்தின் தொடக்கத்தில் காங்கோவின் சுகாதாரத் துறை அமைச்சர் இலுங்கா கலேங்கா உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து, எபோலா வைரஸ் அடுத்தடுத்து மக்களுக்கு வேகமாகப் பரவியது. சமீபத்தில் காங்கோவில் எபோலா நோயால் 42 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 23 பேர் உயிழந்துள்ளனர்.
பீகார் அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளைக் கொள்முதல் செய்து பொதுமக்களிடம் விற்பனை செய்யக் காய்கறி கூட்டுறவு மையங்களை அமைக்கவுள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலையும் நுகர்வோருக்குச் சிறந்த காய்கறிகளும் கிடைக்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் பீகார் மாநில பால் கூட்டுறவு கூட்டமைப்பு மாதிரியைப் பின்பற்றி செயல்படவுள்ளது. சுதா பிராண்ட் பாலைப் போலவே காய்கறிகளும் சேமிக்கப்பட்டு பதப்படுத்தி விநியோகிக்கப்படவுள்ளன.
பாட்னா, நாலந்தா, வைஷாலி, சமஸ்திபூர் மற்றும் பேகுசராய் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 97 தொகுதிகளில் இதுபோன்ற காய்கறி கூட்டுறவு மையங்களை அமைத்துள்ளதாகவும், அக்டோபர் முதல் சுதா பால் மையங்களில் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன என்றும் அம்மாநிலக் கூட்டுறவு அமைச்சர் ரானா ரந்திர் சிங் தெரிவித்துள்ளார்.
பாட்னா, நாலந்தா, வைஷாலி, சமஸ்திபூர் மற்றும் பேகுசராய் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 97 தொகுதிகளில் இதுபோன்ற காய்கறி கூட்டுறவு மையங்களை அமைத்துள்ளதாகவும், அக்டோபர் முதல் சுதா பால் மையங்களில் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட உள்ளன என்றும் அம்மாநிலக் கூட்டுறவு அமைச்சர் ரானா ரந்திர் சிங் தெரிவித்துள்ளார்.
ரஸ்கின் பாண்ட்
இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். பிரிட்டிஷ் நாட்டின் வழி வந்தவரான ரஸ்கின், இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய சில துணுக்குகள்:
1. இந்தியாவின் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்றழைக்கப்படுவது, ரஸ்கின் பாண்ட்தான்.
2. இவரது முதல் நாவலான The Room on the Roof வெளியானபோது இவரது வயது, 21.
3. Edith Clarke மற்றும் Aubrey Bond ஆகிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில் பெற்றோரின் விவாகரத்தைக் காண்கிறார். அதன் பிறகு, இவருடைய அம்மா ஓர் இந்தியரை மணக்கிறார்.
4. 1950ஆம் ஆண்டு, 16 வயதில், ரஸ்கின் பாண்ட் தன் முதல் சிறுகதையான 'Untouchable'ஐ எழுதினார்.
5. சிறு வயதில் இவருக்கு ஒரு tap dancer ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது.
6. சிறு வயதில் இவருக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகம்: Ali in Wonderland: And Other Tall Tales.
7. மழை பெய்தால் இவர் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்வதுடன், முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.
8. இவரது "Susana's seven husbands" என்ற நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட "7 khoon maaf” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
9. 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது; 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 2014இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை இவருக்குக் கொடுத்து கவுரவித்திருக்கிறது இந்திய அரசு.
இந்தியாவில் குழந்தைகள் இலக்கியத்தில் பங்காற்றியவர்களில் மிகவும் முக்கியமானவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். பிரிட்டிஷ் நாட்டின் வழி வந்தவரான ரஸ்கின், இதுவரை ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். இவரது பிறந்த நாளான இன்று இவரைப் பற்றிய சில துணுக்குகள்:
1. இந்தியாவின் வில்லியம் வேர்ட்ஸ்வர்த் என்றழைக்கப்படுவது, ரஸ்கின் பாண்ட்தான்.
2. இவரது முதல் நாவலான The Room on the Roof வெளியானபோது இவரது வயது, 21.
3. Edith Clarke மற்றும் Aubrey Bond ஆகிய தம்பதியருக்குப் பிறந்த ரஸ்கின் பாண்ட், தனது நான்கு வயதில் பெற்றோரின் விவாகரத்தைக் காண்கிறார். அதன் பிறகு, இவருடைய அம்மா ஓர் இந்தியரை மணக்கிறார்.
4. 1950ஆம் ஆண்டு, 16 வயதில், ரஸ்கின் பாண்ட் தன் முதல் சிறுகதையான 'Untouchable'ஐ எழுதினார்.
5. சிறு வயதில் இவருக்கு ஒரு tap dancer ஆக வேண்டும் என்பது ஆசையாக இருந்திருக்கிறது.
6. சிறு வயதில் இவருக்கு மிகவும் பிடித்தமான கதைப் புத்தகம்: Ali in Wonderland: And Other Tall Tales.
7. மழை பெய்தால் இவர் மிகவும் சோம்பேறித்தனமாக உணர்வதுடன், முணுமுணுத்துக் கொண்டே இருப்பாராம்.
8. இவரது "Susana's seven husbands" என்ற நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட "7 khoon maaf” என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
9. 1992ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது; 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது; 2014இல் பத்ம பூஷண் ஆகிய விருதுகளை இவருக்குக் கொடுத்து கவுரவித்திருக்கிறது இந்திய அரசு.
71ஆவது கான் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த மே 8ஆம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் பல உலக நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு திரைத் துறையில் சிறந்து பணியாற்றிய பெண் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது நடிகை ஸ்ரீ தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக ஈரான் உருவாகியுள்ளது.தற்போது ஈரானிடமிருந்து தனது இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈராக் மற்றும் சவுதி அரேபிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத்தை ஈரான் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் வெனிசுலாவும், ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளன. உலக எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஈரான் முக்கிய நாடாக விளங்குகிறது
வடகிழக்குப் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தவும், இந்தியாவுடன் அப்பிராந்தியத்தின் தொடர்பினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பார்சல் சரக்கு விரைவு ரயில் (Parcel Cargo Express Train) என்ற சரக்கு ரயிலை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயில் தனது முதல் ஓட்டத்தை மே 17ஆம் தேதியன்று தொடங்கியது. அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில், மகாராஷ்டிர மாநிலத்தின் கல்யாண் நகரைச் சென்றடையும்.
85 கோடி இணையப் பயன்பாட்டாளர்களால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிவேக இணைய வசதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிராமப்புறத்தில் இணையப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
தனது திரைப்படங்கள் வாயிலாக இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இணைப்பு பாலமாகச் செயல்பட்டதற்காக அமிதாப் பச்சனுக்கு கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவுக்கான இந்திய தூதரக அலுவலகத்தில் ‘ஈரோப் டே 2018’ விழா அனுசரிக்கப்பட்டது. அந்த விழாவில் அமிதாப்புக்கு இந்தக் கௌரவ விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது. அமிதாப்பின் திரைப்படங்கள் அனைத்துமே ஐரோப்பியர்களை மிக நெருக்கமாகக் கவரும்படியும் இந்திய கலாச்சாரத்தை ஐரோப்பியர்கள் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருப்பதால் அங்குள்ளவர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. எனவே அமிதாப்புக்கு இந்த விருதை வழங்குவதில் பெருமை கொள்வதாக ஐரோப்பிய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே19 ) ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரின் குரேஸ் பகுதியில் 330 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் கிஷன் கங்கா மின்சார திட்டம் மற்றும் ஸ்ரீநகர் வட்டச் சாலை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அனைத்து பருவ காலங்களிலும் ஸ்ரீநகர், கார்கில், லே பகுதிகளை இணைக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்கி வைத்தார். ”ஜம்மு காஷ்மீர் ரூ.25000 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகளால் வளர்ச்சி அடையப் போகிறது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். 14 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதை, நாட்டிலேயே மிகவும் நீளமான சுரங்கப்பாதையாக இருக்கும். மேலும் ஆசியாவிலேயே மிக நீண்ட இரு திசை சுரங்கப் பாதையாகவும் இது இருக்கும்” என்றார் மோடி.
டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கல்வி அலுவல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் "இஸ்லாமிய பயங்கரவாதம்" என்ற புதிய படிப்பைத் தொடங்குவதற்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கல்வி அலுவல் குழுவில் தேசியப் பாதுகாப்பு ஆய்வு மையமும் இணைந்து "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற புதிய பாடத்திட்டம் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. |
ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெண்கள் நாளை திங்களன்று கோவா வந்தடையவுள்ளனர்.
இந்தியக் கடற்படையில் முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
உத்தரகாண்டைச் சேர்ந்த வர்த்திகா ஜோஷி (28) தலைமையில் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா ஜம்வால், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்வாதி, மணிப்பூரைச் சேர்ந்த விஜயதேவி, தெலங்கானாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, டேராடூனைச் சேர்ந்த பாயல் குப்தா ஆகியோர் நிக்கா சாகர் பரிக்கிராம என்ற திட்டத்தின் பெயரில் 26,100 நாட்டிக்கல் மைல், அதாவது 42,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டனர்.
இந்த எட்டு மாத பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபோக்லாந்து தீவுகள், கேப் டவுன் ஆகிய இடங்களில் மட்டுமே கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையில் முதன்முறையாக ஆறு பெண் அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஐ.என்.எஸ்.வி. தாரினி என்ற கப்பலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
உத்தரகாண்டைச் சேர்ந்த வர்த்திகா ஜோஷி (28) தலைமையில் ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபா ஜம்வால், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்வாதி, மணிப்பூரைச் சேர்ந்த விஜயதேவி, தெலங்கானாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா, டேராடூனைச் சேர்ந்த பாயல் குப்தா ஆகியோர் நிக்கா சாகர் பரிக்கிராம என்ற திட்டத்தின் பெயரில் 26,100 நாட்டிக்கல் மைல், அதாவது 42,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டனர்.
இந்த எட்டு மாத பயணத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபோக்லாந்து தீவுகள், கேப் டவுன் ஆகிய இடங்களில் மட்டுமே கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணிகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சாலைகளுக்குத் தரவரிசை வழங்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெடுஞ்சாலைகளுக்குத் தரவரிசை வழங்குவதன் மூலம் போட்டித்தன்மை உருவாக்கி வாகன ஓட்டிகளுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
Saturday, May 19, 2018
சிஎம்எஸ் இந்தியா அமைப்பினர் வெளியிட்ட ஊழல் ஆய்வு - 2018 அறிக்கையில் இந்திய அளவில் ஊழலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெலங்கானா ஊழலில் இரண்டாம் இடத்தையும், ஆந்திரா நான்காம் இடத்தையும் பிடித்து தென்னிந்தியாவுக்குப் ‘பெருமை’ சேர்த்திருக்கின்றன. சிஎம்எஸ் அமைப்பின் அலோக் ஸ்ரீவத்சவா இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் பல்வேறுகட்ட ஆய்வுகள் மூலமாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதாரம், மக்கள் நிலை உள்ளிட்ட பல்வேறு துணைக் காரணிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் தமிழ்நாடு ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிக மிக பலவீனமாக இருக்கிறது தமிழ்நாடு” என்று குறிப்பிடுகிறார். |
Friday, May 18, 2018
BEST AND TOP IAS ACADEMY IN COIMBATORE IS SHANMUGAM IAS ACADEMY
BEST AND TOP IAS ACADEMY IN COIMBATORE IS SHANMUGAM IAS ACADEMY
Thursday, May 17, 2018
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர்,போபால், சண்டிகர் ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்வச் சர்வேக்ஷன் 2018 என்ற இந்த ஆய்வு 4,203 நகரங்களில் ஜனவரி 4 முதல் மார்ச் 10, 2018 வரை நடைபெற்றது. குடிமக்கள் கருத்து, நேரடியாக இடத்தை பார்வையிடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குடிமக்கள் கருத்திற்கு அதிகபட்சமாக 35% மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதன் முடிவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று (மே 16) வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல் மாநில தலைநகரங்களின் பட்டியலில் பெருநகர மும்பை முதலிடம் பிடித்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட பட்டியலில் மைசூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஜியாபாத், வேகமாக வளரும் பெரிய நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜார்க்கண்ட் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்வச் சர்வேக்ஷன் 2018 என்ற இந்த ஆய்வு 4,203 நகரங்களில் ஜனவரி 4 முதல் மார்ச் 10, 2018 வரை நடைபெற்றது. குடிமக்கள் கருத்து, நேரடியாக இடத்தை பார்வையிடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் குடிமக்கள் கருத்திற்கு அதிகபட்சமாக 35% மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதன் முடிவுகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று (மே 16) வெளியிட்டார்.
அந்தப் பட்டியலில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. அதேபோல் மாநில தலைநகரங்களின் பட்டியலில் பெருநகர மும்பை முதலிடம் பிடித்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது. தூய்மை நகரங்களின் பட்டியலில் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட பட்டியலில் மைசூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கஜியாபாத், வேகமாக வளரும் பெரிய நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜார்க்கண்ட் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, May 16, 2018
May
01 May: May Day, International Labour Day
03 May: World Press Freedom Day; World Press Freedom Day
04 May: International Firefighters’ Day, Star Wars Day
05 May: International Midwives Day
08 May: World Red Cross and Red Crescent Day
09 May: Europe day
11 May: National Technology Day
12 May: International Nurses Day; World Migratory Bird Day; International Nurses Day
15 May: International Day of Families; International Day of Families
16 May: National Dengue Day
17 May: World Hypertension Day; World Telecommunication and Information Society
Day; World Telecommunication and Information Society Day; World AIDS Vaccine
Day; International Day Against Homophobia and Transphobia
18 May: International AIDS Candlelight Memorial; International Museum Day 20 May:
Vesak, the Day of the Full Moon
21 May: World Day for Cultural Diversity for Dialogue and Development;
22 May: International Day for Biological Diversity; World Goth Day
23 May: World Turtle Day
25 May: Geek Pride Day
29 May: International Day of UN Peacekeepers 31 May: World No-Tobacco Day; World
No-Tobacco Day
8-9 May: Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives
during the Second World War 12-13 May: World Migratory Bird Day
1st Tuesday of May: World Asthma Day
2nd Saturday of May: World Fair Trade Day
01 May: May Day, International Labour Day
03 May: World Press Freedom Day; World Press Freedom Day
04 May: International Firefighters’ Day, Star Wars Day
05 May: International Midwives Day
08 May: World Red Cross and Red Crescent Day
09 May: Europe day
11 May: National Technology Day
12 May: International Nurses Day; World Migratory Bird Day; International Nurses Day
15 May: International Day of Families; International Day of Families
16 May: National Dengue Day
17 May: World Hypertension Day; World Telecommunication and Information Society
Day; World Telecommunication and Information Society Day; World AIDS Vaccine
Day; International Day Against Homophobia and Transphobia
18 May: International AIDS Candlelight Memorial; International Museum Day 20 May:
Vesak, the Day of the Full Moon
21 May: World Day for Cultural Diversity for Dialogue and Development;
22 May: International Day for Biological Diversity; World Goth Day
23 May: World Turtle Day
25 May: Geek Pride Day
29 May: International Day of UN Peacekeepers 31 May: World No-Tobacco Day; World
No-Tobacco Day
8-9 May: Time of Remembrance and Reconciliation for Those Who Lost Their Lives
during the Second World War 12-13 May: World Migratory Bird Day
1st Tuesday of May: World Asthma Day
2nd Saturday of May: World Fair Trade Day
Tuesday, May 15, 2018
சென்னையில் மே 15ஆம் தேதியன்று, மின்சக்தித் துறையில் பெண் தொழில்முனைவோருக்கான திட்டமான பவர்டு (POWERED) தொடங்கப்படவுள்ளது. டி.எஃப்.ஐ.டி இந்தியா மற்றும் ஷெல் ஃபவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் சோன் ஸ்டார்ட் அப்ஸ் ஃபார் இந்தியா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இத்திட்டத்தை மும்பையில் ஏப்ரல் 25ஆம் தேதியன்று துவங்கின. பிறகு, இத்திட்டக் குழு அகமதாபாத், டெல்லி, டேராடூன் ஆகிய இடங்களுக்கும் சென்று திட்டத்தைப் பரப்பி வருகிறது.
தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீரின் அளவைக் கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் தலைமையிலான இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் ராம.பழனியப்பன், பி.வி.சீனிவாசராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார். மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
Monday, May 14, 2018
சுவிட்சர்லாந்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி டேவிட் குடால், அந்நாட்டு அரசின் அனுமதியுடன் தன்னை தானே கருணைக் கொலை செய்துகொண்டு காலமானார். உயிரியல் துறையின் உலகின் மூத்த விஞ்ஞானியாக இருந்தவர் டேவிட் குடால். 104 வயதான இவர், வயது மூப்பை கருத்தில் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். பின்பு, அந்த முடிவை மாற்றி தன்னை கருணைக் கொலை செய்து கொள்ள சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கினார். பிரிட்டனில் பிறந்த டேவிட் குடால், உயிரியல் துறை உலகளவிலான பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ’ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ என்கிற அந்நாட்டின் உயரிய விருதை பெற்ற வெகுசில விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். மேலும், இந்த விருது பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தால் மறைந்த விஞ்ஞானி டேவிட் குடாலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லதா மங்கேஷ்கர் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளுள் ஒருவராவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவர். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், அவரது கலை பணிகளைப் பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மவுலி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்ம பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார்.
உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் 1962ஆம் ஆண்டில் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் பெண்டோவைலில் உள்ள ஆர்கனாசஸ். இந்நிறுவனம் இந்தியச் சந்தையை தற்போது குறி வைத்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக ஊடுருவல் 2023ஆம் ஆண்டுக்குள் தற்போதைய நிலையில் இருந்து மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக மதிப்பு 200 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வு கூறுகிறது. தற்போது இதன் மதிப்பு 30 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஆகையால், இந்த ஆன்லைன் வர்த்தக சந்தையில் ஈடுபட வால்மார்ட் அதிக ஆர்வம்காட்டி முதலீடு செய்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரும் தொடங்கினர். இதற்கு முன்பு இருவரும் பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் பணியாற்றியவர்கள். இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் இப்போது முதன்மை நிறுவனமாக ஃபிளிப்கார்ட் விளங்குகிறது. இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 20 பில்லியன் டாலர்களாகும்.
Sunday, May 13, 2018
காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையில் நேற்று (மே 11) அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், ”பெண்கள் அல்லது பெண் குடும்பத்தினர் பெயரில் சொத்து வாங்குபவர்களுக்கு முத்திரைக் கட்டணத்திலிருந்து முற்றிலுமாக விலக்கு அளித்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புறநகரில் ஆண்கள், ஆண் குடும்பத்தினர் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு 5 சதவிகிதமும், கிராமப் பகுதிகளில் சொத்துக்கள் வாங்குபவர்களுக்கு 3 சதவிகித முத்திரைக் கட்டணம் செலுத்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது பெண்கள் சொத்து வாங்குவதை ஊக்குவிக்க உதவும்” என்றார்.
மருத்துவர்கள்கூடச் செய்யத் தயங்கும் சில விஷயங்களைச் செவிலியர்கள் அசாத்தியமாகச் செய்து முடிப்பார்கள். யாரென்றே தெரியாதர்வகளிடம்கூடக் குறையாத அன்பை நீட்டுவார்கள். அதில் ஒரு தாய்மை குணம் இருக்கும். அப்படிப்பட்ட செவிலியர்களைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைச் சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses ) இந்த தினத்தை அனுசரித்துவருகிறது. ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்தவச் சேவையின் வரலாற்று மைல்கல் என அழைக்கப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளைச் சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. |
அன்னையர் தினமான இன்று (மே 13) உலகம் முழுதும் உள்ள அன்னையர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகக் கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினமானது 1908ஆம் ஆண்டு உருவானது. அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணி இறந்த தன் தாயாருக்கு மேற்கு விர்ஜினியாவிலுள்ள செயின்ட் ஆண்ட்ரூ தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தினார். அப்போது உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களைப் பெருமைப்படுத்த ஒரு நாளை உருவாக்கினார். அதைத் தான் இன்று வரை நாம் அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
Saturday, May 12, 2018
அமெரிக்காவை சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று தனியார் நிறுவனம் நியூ ஷேஃபர்ட் 2.0 என்று ராக்கெட்டை விண்ணில் ஏவி இருக்கிறது. ஜெஃப் பிஸோஸ் என்ற அமெரிக்கருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும் இது. பொதுவாக பூமியை விட்டு வெளியே செல்லும் ராக்கெட்டுகள் திரும்பி வராது. அப்படி வந்தால், பூமியின் வளிமண்டலம் காரணமாக அது தீப்பிடித்து சாம்பலாகும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தீயில் சாம்பலாகாமல் மீண்டும் பூமிக்கு திரும்ப வரும் ராக்கெட்டுகளை வடிவமைத்தது. தற்போது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் இப்படி வடிவமைத்துள்ளது. அவர்கள் அனுப்பிய நியூ ஷேஃபர்ட் 2.0 ராக்கெட்டும் திரும்பி வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால் இதன் வேகம் போதவில்லை என்பதால் தற்போது இன்சைட் ரோபோட் அனுப்பப்பட்டு உள்ளது. இதோடு இன்னும் சில வருடங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும்.
பாகிஸ்தான் நாட்டின் ஈகாமர்ஸ் நிறுவனமான டாரஸ் என்னும் நிறுவனத்தை சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அலிபாபா கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அலிபாபா தனது வெளிநாட்டு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டாரஸ் நிறுவனத்தின் வாயிலாகத் தென் ஆசிய நுகர்வோர் சந்தையைப் பெரிய அளவில் கைப்பற்றவும் அலிபாபா திட்டமிட்டுள்ளது.
திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைத்து தமிழக அரசு நேற்று (மே 11) உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
வழக்குலம் அன்னாசிப் பழங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சிக்கு அருகிலுள்ள சிறிய நகரம் வழக்குலம். இந்த நகரம் அன்னாசிப் பழ உற்பத்திக்குப் புகழ்பெற்றது. அன்னாசி நகரம் என்றே இந்நகரம் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அன்னாசிப் பழ உற்பத்தி மையமாகவும் வழக்குலம் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 80 விழுக்காடு அன்னாசிப் பழங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் அன்னாசிப் பழ உற்பத்தியில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, May 11, 2018
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பச்சை பதிவெண் பலகைகள் வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்படி, தனியார் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பதிவெண்கள் வெள்ளை நிறத்திலும், டாக்ஸிகளுக்கு பதிவெண்கள் மஞ்சள் நிறத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இயக்க அனுமதி வழங்கவும், குறிப்பிட்ட விழுக்காட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்க டாக்ஸி நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் அரசுமுறை சுற்றுப் பயணமாக இன்று காலை நேபாளம் செல்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் பிரதமராகப் பதவியேற்ற மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் சென்றார், தற்போது மூன்றாவது முறையாக நேபாளம் செல்கிறார்.
பிரதமர் வந்தாலும் வராவிட்டாலும் ஜூன் 1ஆம் தேதி கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை திறக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணி முடிவடைந்த பிறகும், சாலை பயன்பாட்டுக்கு வரவில்லை.
135 கி.மீ நீளமுள்ள எக்ஸ்பிரஸ் சாலையானது காசியாபாத், பரிதாபாத், கவுதம் புத்தா நகர் (கிரேட்டர் நொய்டா) மற்றும் பல்வால் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால், டெல்லி நகருக்குள் பயணம் செய்யும் சுமார் 2 லட்சம் வாகனங்கள் நகருக்குள் வர வேண்டிய தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசலும் இருக்காது.
உலகளவில் கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐநா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவம் மற்றும் அறிவியல் பயன்பாட்டுக்காகச் சட்டரீதியாக உலகத்தின் சில பகுதிகளில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. ஐநாவின் சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, 2016ஆம் ஆண்டில் 95 டன் அளவிலான கஞ்சாவை இங்கிலாந்து உற்பத்தி செய்துள்ளது. இது 2015ஆம் ஆண்டின் உற்பத்தியை விட இரு மடங்கு அதிகமாகும். மேலும், இது உலகின் மொத்த கஞ்சா உற்பத்தியில் 44.9 விழுக்காடு ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் 80.7 டன் கஞ்சா உற்பத்தியுடன் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய சோலார் மின் உற்பத்தியாளர்கள் சோலார் உபகரணங்களை எளிமையாக இறக்குமதி செய்யும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2022ஆம் ஆண்டுக்குள் 175 கிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்னுற்பத்தி செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புனிதமான கங்கை நதி அதிக மாசடைந்து வருவதால் அதைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் 2014ஆம் ஆண்டின் ஜூன் மாதம் மத்திய மோடி அரசால் ரூ.20,000 கோடி பட்ஜெட் இலக்குடன் ‘கங்கை தூய்மைத் திட்டம்’ (நமாமி கங்கே) செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின்கீழ் குறிப்பிடும்படியாக எதுவும் நடக்கவில்லை என்றும், கங்கை நதி தூய்மைப்படுத்தப்படவேயில்லை என்றும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. இதை மறுக்கும் மத்திய அரசு, 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் கங்கை நதியின் 70 முதல் 80 சதவிகிதம் அளவு தூய்மைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மவுண்ட் மெரப்பி என்பது இந்தோனேசியாவில் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றாகும் . இது மக்கள் அடர்த்தியாக வசிக்கும் ஜாவா தீவுக்கு அருகிலுள்ளது.இது 2010இல் குமுறி வெடித்ததில் 350 பேர் உயிரழந்தனர். தற்போது எரிமலை வெடித்து எரிகுழம்பு வெளியாவதற்கு முன்னதான நீராவி வெளியேறிக்கொண்டிருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடித்து எரிகுழம்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, May 10, 2018
இந்தியத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேயிலை உற்பத்தி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உற்பத்தி 5.9 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில் ஏற்றுமதியும் 12.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017-18இல் மொத்தம் 256.6 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து எகிப்து, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. |
அமெரிக்காவின் வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஒவ்வோர் ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 75 மனிதர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீன அதிபர் க்ஷி ஜின்பிங் முதலிடத்திலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டாம் இடத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு 32ஆம் இடம் கிடைத்துள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் 4ஜி சேவையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதாகவும், குறுகிய காலத்தில் 16 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Wednesday, May 9, 2018
வைட்டமின்கள் வேதிப்பெயர்கள்:-
🍄 வைட்டமின் A - ரெட்டினால்
🍄 வைட்டமின் B1 - தயமின்
🍄 வைட்டமின் B2 - ரிபோஃப்ளேவின்
🍄 வைட்டமின் B6 - பைரிடாக்ஸின்
🍄 வைட்டமின் B12 - சையனகோபாலமின்
🍄 வைட்டமின் C - அஸ்கார்பிக் அமிலம்
🍄 வைட்டமின் E - டோகோபெரால்
🍄 வைட்டமின் K - பைலோகுயினோன்
கண்டுபிடித்தவர்:-
● கால்சியம் கண்டுபிடித்தவர் - ஹென்றி டேவி
● ரேடியம் கண்டுபிடித்தவர் - மேடம் கியூரி
● அயோடின் கண்டுபிடித்தவர் - கோர்ட்டாய்ஸ்
● பாஸ்பரஸ் கண்டுபிடித்தவர் - பிராண்ட்
● அலுமினியம் கண்டுபிடித்தவர் - ஹோலர்
● குளோரின் கண்டுபிடித்தவர் - ஷீல்லி
●. யுரேனியம் கண்டுபிடித்தவர் - பெலிகாட்
● பேட்டரி கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் வோல்டா
● கதிரியக்கம் கண்டுபிடித்தவர் - ஹென்றி பெக்கொரல்
● டைனமைட் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் நோபள்
பொருட்கள் அதில் உள்ள அமிலங்கள்:-
🎯 ஆப்பிள் - மாலிக் அமிலம்
🎯 தக்காளி - ஆக்சாலிக் அமிலம்
🎯 திராட்சை - டாட்டாரிக் அமிலம்
🎯 எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்
🎯 பால் - லாக்டிக் அமிலம்
🎯 வெண்ணெய் - பியூட்ரிக் அமிலம்
🎯 வினிகர் - அசிட்டிக் அமிலம்
🎯 கொழுப்பு - ஸ்டெர்ரிக் அமிலம்
🎯 எறும்பு கொடுக்கு - பார்மிக் அமிலம்
🎯 வெங்காயம் - அனலின் அமிலம்
🍄 வைட்டமின் A - ரெட்டினால்
🍄 வைட்டமின் B1 - தயமின்
🍄 வைட்டமின் B2 - ரிபோஃப்ளேவின்
🍄 வைட்டமின் B6 - பைரிடாக்ஸின்
🍄 வைட்டமின் B12 - சையனகோபாலமின்
🍄 வைட்டமின் C - அஸ்கார்பிக் அமிலம்
🍄 வைட்டமின் E - டோகோபெரால்
🍄 வைட்டமின் K - பைலோகுயினோன்
கண்டுபிடித்தவர்:-
● கால்சியம் கண்டுபிடித்தவர் - ஹென்றி டேவி
● ரேடியம் கண்டுபிடித்தவர் - மேடம் கியூரி
● அயோடின் கண்டுபிடித்தவர் - கோர்ட்டாய்ஸ்
● பாஸ்பரஸ் கண்டுபிடித்தவர் - பிராண்ட்
● அலுமினியம் கண்டுபிடித்தவர் - ஹோலர்
● குளோரின் கண்டுபிடித்தவர் - ஷீல்லி
●. யுரேனியம் கண்டுபிடித்தவர் - பெலிகாட்
● பேட்டரி கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் வோல்டா
● கதிரியக்கம் கண்டுபிடித்தவர் - ஹென்றி பெக்கொரல்
● டைனமைட் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் நோபள்
பொருட்கள் அதில் உள்ள அமிலங்கள்:-
🎯 ஆப்பிள் - மாலிக் அமிலம்
🎯 தக்காளி - ஆக்சாலிக் அமிலம்
🎯 திராட்சை - டாட்டாரிக் அமிலம்
🎯 எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்
🎯 பால் - லாக்டிக் அமிலம்
🎯 வெண்ணெய் - பியூட்ரிக் அமிலம்
🎯 வினிகர் - அசிட்டிக் அமிலம்
🎯 கொழுப்பு - ஸ்டெர்ரிக் அமிலம்
🎯 எறும்பு கொடுக்கு - பார்மிக் அமிலம்
🎯 வெங்காயம் - அனலின் அமிலம்
Tuesday, May 8, 2018
தமிழக பள்ளி மாணவி கண்டுபிடித்த “அனிதா சாட்” என்ற மினி சாட்டிலைட் இன்று விண்ணில் பாய்ந்தது.
திருச்சி திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் வில்லட் ஓவியா. 12ம் வகுப்பு தோ்வெழுதியுள்ள ஓவியா கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னா் வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளும் வகையில் குறைந்த எடை கொண்ட செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்துள்ளாா்.
கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தவைா் அப்துல் கலாம் அவா்களால் தொடங்கி வைக்கப்பட்ட அக்னி இக்னைட் இந்தியா என்ற தனியாா் அமைப்பு 7ம் அறிவு என்ற பெயாில் விஞ்ஞானிகளை தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்புடன் இணைந்து இந்த மினி சாட்டிலைட் தயாாிக்கப்பட்டுள்ளது.
திருச்சி திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்தவா் வில்லட் ஓவியா. 12ம் வகுப்பு தோ்வெழுதியுள்ள ஓவியா கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னா் வளிமண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளும் வகையில் குறைந்த எடை கொண்ட செயற்கை கோள் ஒன்றை வடிவமைத்துள்ளாா்.
கடந்த 2014ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தவைா் அப்துல் கலாம் அவா்களால் தொடங்கி வைக்கப்பட்ட அக்னி இக்னைட் இந்தியா என்ற தனியாா் அமைப்பு 7ம் அறிவு என்ற பெயாில் விஞ்ஞானிகளை தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்புடன் இணைந்து இந்த மினி சாட்டிலைட் தயாாிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)