Saturday, March 15, 2014

இந்தியா-இங்கி., முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமாயணம்

இந்தியா-இங்கிலாந்து நிபுணர்களின்  கூட்டு முயற்சியில் டிஜிட்டல் வடிவில் ராமாயணம் தயாரிக்கப்பசடுகிறது. 

பணவீக்கம் 4.68 சதவீதமாகக் குறைவு

நாட்டின் பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.68 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 9 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.

பட்ஜெட் பற்றாக்குறை: இத்தாலிக்கு ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை

பட்ஜெட் பற்றாக்குறையை இத்தாலி அரசு குறைக்கத் தவறியதற்கு ஐரோப்பிய மத்திய வங்கி (இசிபி) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூனியன் அமைப்பு பரிந்துரை செய்தபடி பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க இத்தாலி அரசு தவறி விட்டதாக இசிபி சுட்டிக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர் ராஜினாமா: புதிய தலைவராக மாத்யூ பொறுப்பேற்பு

எம்சிஎக்ஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தலைவர் பதவியை ஜி.கே. பிள்ளை ராஜினாமா செய்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து துணைத் தலைவராக இருந்த தாமஸ் மாத்யூ, தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திரா காந்தி மேம்பாட்டு மையத்தின் பேராசிரியர் அஷிமா கோயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல் சூரிய சக்தி கழிவறை இந்தியாவில் அறிமுகம்: தண்ணீர் தேவையில்லை; சுற்றுச் சூழலுக்கு உகந்தது

உலகின் முதல் சூரிய சக்தி கழிவறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இக் கழிவறை வரும் 22-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Thursday, March 13, 2014

பார்ச்சூன் இந்தியா பட்டியலில் 7 பெண்கள்

40 வயதுக்குள்பட்ட இளம் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் முனைவோர் பட்டியலை பார்ச்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு சலுகை காட்டும் வங்கி

உஷா அனந்தசுப்ரமணியன்பெண்களுக்காகவே தொடங்கப்பட்ட பாரதிய மகிளா வங்கி (பி.எம்.பி.) 2013 நவம்பர் முதல் செயல்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள்தான் என்ன? அது வழங்கும் கடன்களுக்கு இதர அரசுத்துறை வங்கிகள் வசூலிக்கும் வட்டி வீதத்தைவிடக் குறைவு என்பதுதான் முக்கியமானது. கார் வாங்க, வீடு கட்ட, கல்லூரிகளில் உயர் கல்வி கற்க அது வழங்கும் கடன்கள் மீது குறைவான வட்டியே வசூலிக்கப் படுகிறது.

Monday, March 10, 2014

ஒருநாள் தரவரிசை: கோலி மீண்டும் முதலிடம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதில் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சந்தோஷ் டிராபி: மிசோரம் சாம்பியன்

கோப்பையுடன் மிசோரம் அணியினர் | படம்: சுஷாந்தா பட்ரோனோபிஷ்சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மிசோரம் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியைத் தோற்கடித்த மிசோரம் அணி, சந்தோஷ் டிராபி சாம்பியன்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

தேர்தல் மன்னன் சுபுதி 28-வது முறையாக போட்டி

 ஷ்யாம் பாபு சுபுதிதமிழ்நாட்டின் தேர்தல் மன்னன் மேட்டூர் பத்மராஜனைப் போல, ஒடிசாவில் இதுவரை 27 முறை தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய ஷ்யாம் பாபு சுபுதி (78) வரும் மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.

Sunday, March 9, 2014

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் காப்புரிமை?

தமிழ்நாட்டின் நரசிங்கம்பேட்டைப் பகுதியில் தயாராகும் நாதஸ்வரங்களுக்கு புவிசார் காப்புரிமை கோரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

"பருவநிலை மாற்றம் காரணமாய் மலேரியா பரவும் வேகம் அதிகரிக்கும்"

வெப்பம் அதிகரிக்க மலேரியா கிருமியை சுமக்கும் கொசுக்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொள்கின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் மலேரியா நோய்ப் பரவல் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும், இதனால் ஆப்பிரிக்காவின் மலைப் பிராந்தியங்களிலும் தென்னமெரிக்காவிலும் மலேரியா பரவும் அபாயம் எழுந்துள்ளது என்றும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

5-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் ஆனது.