Wednesday, April 30, 2014

இந்தியருக்கு 'கிரீன் நோபல்' விருது

 Photo: இந்தியருக்கு 'கிரீன் நோபல்' விருது

இந்தியரான, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான 'கிரீன் நோபல்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் நடத்தி வந்த நிலக்கரிச் சுரங்கத்தை மூடியதன் மூலம் இந்த விருதை பெற்றுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிச்சர்ட் மற்றும் டேவிட் கோல்ட்மேன் அமைப்புகள், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட ஆறு பகுதிகளிலும் சிறந்து செயல்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மதிப்பளிக்கும் விதமாக கடந்த 1990ஆம் ஆண்டு 'கிரீன் நோபல்' என்ற அமைப்பை உருவாக்கியது.

இந்த வகையில் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான கிரீன் நோபல் விருதுக்கு ரமேஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் விழாவில் 'கிரீன் நோபல்' விருதை அவர் பெறுகிறார். இந்த விருதுக்கான பரிசுத்தொகை 1,75,000 அமெரிக்க டாலர் (ரூ.1.06 கோடி) ரமேஷ் அகர்வாலுக்கு வழங்கப்படுகிறது.

பெருகிவரும் தொழில்மயத்தில் இருந்து மக்களையும், சுற்றுச்சூழலையும் காப்பதற்காக ஜன் சேத்தனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ராமேஷ் நடத்தி வருகிறார்.

தாக்குதல்களுக்கு அஞ்சாத ரமேஷ்:

தொழிற்சாலைத் திட்டங்கள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மக்கள் இடம்பெயர்வதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தடுத்தார் ரமேஷ் அகர்வால். இதனையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அகர்வாலை துப்பாக்கியால் சுட்டனர். ஆனாலும் அச்சுறுத்தல்களுக்கு அவர் அஞ்சவில்லை.

இந்தியரான, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான 'கிரீன் நோபல்' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Sunday, April 20, 2014

ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்திற்கு 3 தேசிய விருது

தங்க மீன்கள்' திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 'தலைமுறைகள்', தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பிரிவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் விருது

டாடா குழுத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடாவுக்கு பிரிட்டன் அரசி எலிசபெத், அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.

Saturday, April 19, 2014

ஹிந்தி கவிஞர் குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது

பிரபல கவிஞரும், முதுபெரும் இயக்குநருமான குல்சாருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கடற்படை தலைமை தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் பொறுப்பேற்பு

Photo: புதிய கடற்படை தலைமை தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் பொறுப்பேற்பு

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் டெல்லியில் வியாழக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.

கடற்படையில் அண்மைக் காலங்களில் அடுத்தடுத்து 14 விபத்துகள் நேரிட்டன. இதைத் தொடர்ந்து கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி 2 மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தற்காலிக தளபதியாக ராபின் கே. தோவன் பொறுப்பேற்றார். நேற்று அவர் நாட்டின் 22-வது கடற்படைத் தளபதியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

ராபின். கே. தோவன் மே 31-ல் ஓய்வு பெறுவதாக இருந்தது. தற்போது அவர் தளபதியாக பொறுப்பேற்றி ருப்பதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார். அதன்படி 2016 மே மாதம் வரை அவர் கடற்படை தளபதியாக செயல்படுவார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற ஆர்.கே.தோவன், ஐ.என்.எஸ்.குக்ரி, ஐ.என்.எஸ். ரஞ்சித், ஐ.என்.எஸ். டெல்லி உள்ளிட்ட பல்வேறு போர்க்கப்பல்களில் பணியாற்றியுள்ளார். கடற்படையில் பல்வேறு முக்கிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ராபின் கே. தோவன் டெல்லியில் வியாழக்கிழமை பொறுப் பேற்றுக் கொண்டார்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தணிக்கை செய்ய சி.ஏ.ஜி.க்கு அதிகாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், மத்திய தணிக்கைத் துறை(சிஏஜி) அமைப்புக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காசநோயை விரைவாகக் கண்டறியும் நவீன கருவி சென்னையில் அறிமுகம்

காசநோயை (டி.பி.) 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் கருவி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசியக் காசநோய் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Tuesday, April 1, 2014

ஆண்டுக்கு 1 டாலர் சம்பளம் பெறும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் 2013 ஆண்டின் சம்பளம் வெறும் 1 டாலர் என்று தெரிகிறது.

நாசா நடத்திய போட்டியில் மதுரை பள்ளி மாணவிகளுக்கு பரிசு

நாசா அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் மூன்றாவது பரிசை வென்ற ஸ்ரீ சாரதா வித்தியாலய மகளிர் பள்ளி மாணவிகள். |படம்: வந்தனா. அறிவியல் சார் கதையை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, நாசா-வின் 2014 ஆம் ஆண்டுக்கான அமெஸ் விண்வெளி வடிவமைப்பு போட்டியின் இலக்கிய பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.

மியான்மரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

மியான்மர் நாட்டில் கடந்த 30 வருடங்களுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் செல்போனில் பேச தடை

குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், ஜப்பானிய நகரமான கரியாவில் இரவு 9 மணிக்கு மேல் அவர்கள் செல்போன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகருக்கு முதல் பெண் மேயர் தேர்வாகிறார்

பிரான்ஸில் பாரிஸ் மேயர் தேர்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. பாரிஸ் நகரில் முதல் முறையாக பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. 
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்